ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியை வரலாற்று நூலில் போட வேண்டும் என்கிறார் மஸ்லான்

 

கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் நேற்று நடைபெற்ற ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியை வரலாற்று பாடப் புத்தகங்களில் போட வேண்டும் என்று அஹமட் மஸ்லான் இகழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

முந்தைய பாரிசான் நிருவாகத்தில் துணைக் கல்வி அமைச்சராக இருந்த மஸ்லான் இந்தப் பேரணி நாட்டின் வரலாற்றில் மிகப் பெரியது என்று டிவிட்டார் செய்துள்ளார்.

ஆகவே வரலாற்றில் மிகப் பெரிய இந்த மக்கள் கூட்டத்தை அமைச்சர் மஸ்லி வரலாற்று புத்தகத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று போந்தியான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, கல்வி அமைச்சர் மஸ்லி பல்லாயிரக் கோடி ரிங்கிட் சம்பந்தப்பட்ட 1எம்டிபி பற்றிய விவகாரங்களை எதிர்கால சந்ததியினர் மீண்டும் செய்யாதிருக்கு அவற்றை மலேசிய வரலாற்றில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதற்குப் பதிலடியாக மஸ்லான் ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியை வரலாற்று பாட நூலில் போட வேண்டும் என்று கூறுகிறார் என்று நம்பப்படுகிறது.