இஸ்தானா நெகராவில் ஆட்சியாளர்கள் கூட்டம்

மாநில ஆட்சியாளர்களின் கூட்டம் இப்போது கோலாலும்பூர் இஸ்தானா நெகாராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யாங் டி பெர்துவான் ஆகோங்காக இருந்த சுல்தான் முகம்மட் V பதவி விலகியதை அடுத்து இக்கூட்டம் நடைபெறுகிறது.

சுல்தான் முகம்மட் V, 2016 டிசம்பர் 13-இல் நாட்டின் 15வது பேரரசராக ஆட்சியாளர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 2021 இறுதிவரை. ஆனால், இடையிலேயே அவர் பதவி விலகினார்.

இனி, ஆட்சியாளர்கள் அடுத்த ஆகோங்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவரை இப்போது துணைப் பேரரசராக உள்ள பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவே பேரரசர் பணிகளைக் கவனித்துக் கொள்வார்.