இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை பிஎன் வியாழக்கிழமை அறிவிக்கும்

பிஎன் கேமரன் மலை இடைத் தேர்தலில் களமிறக்கப் போகும் அதன் வேட்பாளரை வியாழக்கிழமை அறிவிக்கும் என அம்னோ ஆன்லைன் கூறிற்று.

கோலாலும்பூரில் அம்னோ தலைமையகம் அமைந்துள்ள புத்ரா உலக வாணிக மையத்துக்குப் பக்கத்தில் உள்ள ஸ்ரீபசிபிக் தங்கு விடுதியில் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வு நடைபெறும்.

ஜனவரி 26 இடைத் தேர்தலில் எதிரணி களமிறக்கும் வேட்பாளர் யார் என்பது மர்மமாக உள்ளது. அது குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் மஇகா உதவித் தலைவர் சி.சிவராஜ் ஐந்து-முனை போட்டியில் வெற்றிபெற்ற தொகுதி அது.

ஆனால், கடந்த நவம்பரில் தேர்தல் நீதிமன்றம், அது ஊழல் நடவடிக்கைகளால் பெறப்பட்ட வெற்றி என்பதால் செல்லாது என்று தீர்ப்பளித்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப் பணித்தது.

பக்கத்தான் ஹரப்பான் எம்.மனோகரனை அதன் வேட்பாளராக அறிவித்துள்ளது.

மைபிபி தலைவர் எம்.கேவியெஸ் தாமும் அத்தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கடந்த வார இறுதியில் அறிவித்தார்.