15ஆவது பேரரசர் சுல்தான் முகமட் V தமது பதவி விலகல் குறித்து செய்துள்ள முடிவைத் தொர்ந்து, அடுத்த அகோங் யார் என்பது பற்றி பேசப்பட்டு வருகிறது.
சுழல்முறை பட்டியல்படி, பகாங் சுல்தான் அஹமட் ஷா அடுத்து வருகிறார்; அவருக்கு அடுத்து ஜோகூரின் சுல்தான் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் வருகிறார்.
ஆனால், சுல்தான் அஹமட் ஷா உடல்நல்மின்றி இருக்கிறார். இதன் காரணமாக, ஜனவரி 24-இல் நடைபெறவிருக்கும் ஆட்சியாளர்கள் மாநாடு ஜோகூர் சுல்தானை தேர்வு செய்யக்கூடும் என்ற ஊகிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த வரலாற்று நிபுணர் ராம்லா அடாம், உடல்நலமின்றி இருந்தாலும் சுல்தான் அஹமட் ஷா இன்னும் அகோங்காக நியமிக்கப்படலாம் என்றார்.
புதிய அகோங்காக பதவி ஏற்க பகாங் சுல்தான் ஒப்புக்கொண்டால், ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு இதைச் செய்யலாம் என்று ராம்லா கூறினார்.
ஆனால், இதற்கு ஆட்சியாளர்கள் மாநாடு சம்மதிக்குமா என்று ராம்லா கூறியதாக சினார் ஹரியான் செய்து கூறுகிறது.

























