கேமரன் மலை தேர்தல்: மஇகா விலகிக் கொண்டதாக ஒரு வட்டாரம் கூறுகிறது

ஜனவரி 26-இல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூட்டணியின் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யும் பொறுப்பை பிஎன் தலைமையைத்துவத்திடம் விட்டுவிட்டதாகவும் ஒரு வட்டாரம் கூறுகிறது.

இன்று காலையில் நடந்த கட்சியின் மத்தியச் செயளவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்த வட்டாரம் கூறிற்று.

அக்கூட்டத்தில் அங்கேற்ற 56 மத்தியச் செயற்குழு உறுப்பினர்களில், ஆறு உறுப்பினர்கள் மட்டுமே இத்தீர்மானத்தை எதிர்த்தனர்.

இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை பிஎன் தலைவர்கள் தீர்மானிப்பார்கள் என்று அந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான அந்த வட்டாரம் மலேசியாக்கினியிடம் தெரிவித்தது.

சாத்தியமான வேட்பாளர்கள் என்று கருதப்படுவர்களின் பெயர் படடியலில் அம்னோவின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அந்த வட்டாரம் மேலும் கூறியது.