அமைச்சர்: தண்ணீர் கட்டணம் உயரலாம், ஆனால் ‘மக்களுக்குச் சுமையாக இராது’

நாட்டில் நீர் விநியோகத் தொழிலை அரசாங்கம் திருத்தி அமைத்து வருவதால் இவ்வாண்டில் நீர் கட்டணம் கட்டம் கட்டமாக உயர்த்தப்படலாம்.

பயனீட்டாளர் நலன் காக்கவும் அவர்களுக்குத் தரமான நீர் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் கட்டண உயர்வு அவசியமாகிறது என நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.

“ஆனால், கட்டண உயர்வு மக்களுக்குச் சுமையாக இருக்காது. அது குறித்து எல்லா மாநில அரசாங்கங்களுடனும் விவாதிப்போம்”, என்றாரவர்.
சேசியர் நேற்றிரவு பெர்னாமா செய்தி அலையில் ருவாங் பிச்சாரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.