வணிக நிறுவனங்களின் இலாபத்தை எடுத்துக்கொள்ளும் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்பதை வணிக நிறுவனங்கள் வெளிப்படுத்துவதற்காக அவற்றை கட்டாயப்படுத்த ஊழல் தடுப்பு சட்டங்களில் புதிய சட்டவிதிகள் சேர்க்கப்படும் என்று பிரதமர் மகாதிர் கூறினார்.
அரசாங்கத்தின் கவனத்திலிருந்து தப்புவதற்காக பல தொழில் நிறுவனங்களின் சொந்தக்காரர்கள் தங்களின் தொழில்களை மற்றவர்களின் பெயரில் பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மகாதிர் தெரிவித்தார்.
எம்எசிசி சட்டத்தில் இப்புதிய விதிகளைச் சேர்க்க அமைச்சரவை விரும்பியது. அதன்படி சட்டம் இயற்றப்படும். இதன் வழி நாம் நடவடிக்கை எடுத்து இதில் சம்பந்தப்பட்ட உண்மையானவர்களை நாம் அடையாளம் காண முடியும் என்று மகாதிர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.