பெர்சத்து செமினி சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

 

பெர்சத்து செமினி சட்டமன்ற உறுப்பினர் முகமட் பக்தியார் முகமட்நோர் இன்று அதிகாலையில் காலமானார். மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் போர்ஹாம் ஷா இதை உறுதிப்படுத்தினார்.

இன்று அதிகாலை மணி 4.45 அளவில் முகமட் பக்தியார் காலமானார் என்று போர்ஹாம் அவரது அறிக்கையில் கூறுகிறார்.

14ஆவது பொதுத் தேர்தலில், முகமட் பக்தியார் மூன்று இதர வேட்பாளர்களைத் தோற்கடித்து செமினி மாநில இருக்கையைக் கைப்பற்றினார்.

அவர் 23,428 வாக்குகள் பெற்றார். அவருக்கு எதிராக அம்னோவின் ஜோஹான் அப்துல் அசிஸ் 14,464 வாக்குகளும், பாஸின் மாட் ஷமிதுர் மாட் கோசிம் 6,966 வாக்குகளும், பிஎஸ்எம்மின் எஸ். அருட்செல்வன் 1,293 வாக்குகளும் பெற்றனர்.