முன்னாள் தலைமை நீதிபதி பிரதமர் மகாதிரிடம் மன்னிப்பு கோரினார்

 

பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சியில் மே9-இல் டாக்டர் மகாதிர் இஸ்தானா நெகாராவுக்கு அழைப்பு இன்றி சென்றார் என்று கூறியதற்காக மகாதிரிடம் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

முன்னாள் நீதிபதியின் இக்கூற்றை பிரதமர் அனுவலகம் மறுத்ததைத் தொடர்ந்து, தாம் எழுதிய கட்டுரையில் தவறு இழைத்துவிட்டதாகவும் அத்தவறுக்கு முழு பொறுப்பேற்றுக் கொண்டு பிரதமர் மகாதிரிடம் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

பேரரசர் யாங்-டி-பெர்துவான் அகோங்கிடம் அந்த முன்னாள் தலைமை நீதிபதி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தாம் எழுதியிருந்த அக்கட்டுரையில் காணப்படும் தவறுகளைத் திருத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.