‘முதல்முறையாக ஓராங் அஸ்லி ஒருவரைத் தேர்ந்தெடுத்து வரலாறு படைப்பீர்’

கேமரன் மலை இடைத் தேர்தல்: கேமரன் மலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இன்று காலை பிஎன் வேட்பாளர் ரம்லி முகம்மட் நோர், தானா ராத்தாவின் முதன்மை சாலை சென்று அங்கு வாக்காளர்களைச் சந்தித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரம்லி, தீவகற்ப மலேசியாவில் இதுவரை பழங்குடி மக்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்றுரைத்து வாக்காளர்கள் அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“மலேசியா வரலாறு படைக்கட்டும்”, என்று முழங்கிய அவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓராங் அஸ்லி விவகாரங்களை எடுத்துரைக்கப் போவதாகக் கூறினார்.

ஓராங் அஸ்லிகளைப் பிரதிநிதிக்கும் செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர் என்றும் அவர்கள் அனைவரும் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்றும் ரம்லி கூறினார்.