கடப்பிதழைத் திருப்பிக் கொடுப்பீர்: மூசாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சாபா முதலமைச்சர் மூசா அமானின் கடப்பிதழ் அவரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்ற செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவைக் கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இரத்துச் செய்தது.

கடந்த வாரம் செஷன்ஸ் நீதிமன்றம் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்காக மூசாவின் கடப்பிதழ் அவரிடம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை இரத்துச் செய்த உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மட் ஸைனி மஸ்லான், மூசா அவரது நோய்க்குச் சிங்கப்பூரில் அல்லது யுகே-இல் மட்டுமே சிகிச்சை உண்டு என்று எப்போதும் சொல்லியதில்லை என்றார்.

“அவர் தன் நோய்க்குச் சிறப்புச் சிகிச்சை தேவை என்பதையும் அது இங்கு கிடைக்காது என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

“குற்றவாளி தான் விரும்பும் ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்புகிறார். அவருடைய இருதய நோயை இந்நாட்டிலேயே குணப்படுத்த முடியும் என்றே கருதப்படுகிறது”, என்றவர் தீர்ப்பளித்தார்.

மூசா தப்பி ஓடும் அபாயம் இருப்பதால் அவரிடம் கடப்பிதழ் திருப்பிக் கொடுக்கப்படக் கூடாது என்று அரசுத் தரப்பு ஆட்சேபனை எழுப்பி இருந்தது.