மகாதிர்: செமிஞ்சே-இல் பாஸ் அம்னோவை ஆதரிக்காது

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எதிர்வரும் செமிஞ்யே இடைத் தேர்தலில் அம்னோவுக்குப் பாஸ் ஆதரவு இருக்காது என்கிறார்.

இதை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கே நேற்று தம்மைச் சந்திக்க வந்தபோது தெரிவித்ததாக மகாதிர் கூறினார்.

“இந்த இடைத்தேர்தலில் பாஸ் ஆதரவு அம்னோவுக்கு இல்லை”, என்றாரவர்.

நேற்று, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி மகாதிர் முகம்மட்டைக் கோலாலும்புரில் சந்தித்துப் பேசினார்.

அச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என்னவென்று கேட்டதற்கு நிறைய பேசவில்லை. நிர்வாக விவகாரங்கள் பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டதாக அப்துல் ஹாடி கூறினார்.