பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், செமிஞ்யே வருவார், வந்து பிஎன் வேட்பாளர் சக்கரியா ஹனாபிக்காக பரப்புரை செய்வார் என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான்.
“ஆமாம், அவர் நிச்சயம் வருவார்”, என்று தாஜுடின் இன்று செமிஞ்யே-இல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால், எப்போது வருவார்.. அதை அவர் குறிப்பிடவில்லை.
இதனிடையே, சுங்கை பூலோ அம்னோ தொகுதித் தலைவர் பிர்டூஸ் மெகாட் ஜூனிட், பாஸ் தலைவர் ஹாடி, அம்னோ இடைக்காலத் தலைவர் மாட் ஹசான் ஆகிய இருவரும் ஒரே மேடையில் உரையாற்றுவார்கள் என்று கூறினார்.
“ஒன்றிரண்டு இடங்களில் அவர்கள் சேர்ந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்”, என்றாரவர்.