அம்பிகா : ‘அம்னோ-பாஸ்’ , சொல்லாடலில் அச்சம் கொள்ள வேண்டாம்

‘அம்னோ-பாஸ்’ எனும் சொல்லாட்சியில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தொந்தரவு அடையக்கூடாது என்று முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

அதற்கு மாறாக, பல்லின மக்களை ஒற்றுமைபடுத்துதல், மக்களுடையப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் பிஎச் கூட்டணி கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

அம்பிகாவின் கூற்றுப்படி, பாஸ்-அம்னோ ஒத்துழைப்புக்குப் பின்னால், அரசு அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான நோக்கம்தான் உள்ளது.

“அரசியலமைப்பு என்பதில் எந்தவிதமான அர்த்தமும் அவர்களுக்கு இல்லை,” என டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் உதவியாளர் மற்றும் வழக்கறிஞர் ஷாரெட்சானின் டிவீட்டருக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

பாஸ்-அம்னோ உடனான ஒத்துழைப்பில், தான் எந்தவித அதிர்ச்சியும் அடையவில்லை என்றும் அம்பிகா தெரிவித்தார்.

“அது அவர்களின் உரிமை. பல்லினம் மற்றும் மதங்கள் கொண்ட மலேசியர்கள் மீது பிஎச் கவனம் செலுத்த வேண்டும். உலகளலாவிய நிலையில் போட்டியிடும் தகுதியுடையதாக மலேசியாவை உருவாக்க வேண்டும்,” என்றார் அவர்.