ரந்தாவ் வேட்பாளர் யார்? – நாளை அல்லது நாளை மறுநாள் பிகேஆர் அறிவிக்கும்

ரந்தாவ் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அறிவிக்கும்.

மலாய்க்காரர், இந்தியர் என்ற கட்டுப்பாடின்றி, மாநிலத் தலைமைத்துவம் 6 பெயர்களை மத்தியத் தலைமையிடம் கொடுத்துள்ளது என அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“நேற்று, பிஎச் தலைமைத்துவம் கலந்துபேசிவிட்டது, நாளை அல்லது நாளை மறுநாள், வேட்பாளரை அறிவிப்போம்,” என இன்று, ரெம்பாவ் பிகேஆர் அலுவலகத்தை அதிகாரப்பூவமாக திறந்துவைத்த பின்னர் அவர் சொன்னார்.

மாநிலப் பிகேஆர் தலைவர் அமினுட்டின் ஹருண் மற்றும் ரெம்பாவ் பிகேஆர் தலைவர் ஆர் தங்கம் ஆகியோரும் அவருடன் இருந்தனர்.

டாக்டர் எஸ் ஶ்ரீ ராம் மீண்டும் ரந்தாவ்வில் நிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு, “இருக்கலாம்’ என்று அன்வார் பதிலளித்தார்.

நாளை, வேட்பாளரை அறிவிக்கும் போது, அந்நபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை, தான் விளக்கப்போவதாகவும் அன்வார் தெரிவித்தார்.