இவ்வாண்டுக்கான நாடாளுமன்றக் கூட்டம் இன்று தொடங்கியபோது அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி அதில் கலந்துகொள்ளவில்லை.
அதை உறுதிப்படுத்திய அம்னோ உதவித் தலைவர் மஹாட்ஸிர் காலிட், பகான் டத்தோ எம்பி வராததற்கான காரணம் தெரியவில்லை என்றார்.
“அவர் வரவில்லை…..தொடர்புகொள்ளவும் முடியவில்லை”, என்றார்.
அம்னோவிலிருந்து பல எம்பிகள் வெளியேறியதையும் அவரது தலைமைத்துவம் பிடிக்காததால் மேலும் பலர் வெளியேறப்போவதாக மருட்டியதையும் அடுத்து ஜாஹிட் டிசம்பர் 18-இல் தாம் விடுப்பில் செல்வதாக அறிவித்தார்.
அவர் இன்னமும் அம்னோ தலைவர்தான் ஆனால், துணைத் தலைவர் முகம்மட் ஹசான்தான் இப்போது தலைவரின் பொறுப்புகளைக் கவனித்துக் கொள்கிறார்.
ஜாஹிட் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் துறந்தார். இப்போது அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.