கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், அம்மாநிலத்தை பாஸுக்குத் தானம் செய்யும் அம்னோவின் “பெருந்தன்மை”யைப் பாராட்டினார்.
அம்மாநிலத்தில் அம்னோ- பாஸ் ஒத்துழைப்பு அம்னோவைவிட பாஸுக்குத்தான் நன்மையாக முடியும் என்றாரவர்.
“கெடாவை பாஸுக்கு விட்டுக்கொடுத்த அம்னோவுக்குப் பாராட்டு.
“அம்னோவுக்குத்தான் எவ்வளவு பெரிய பெருந்தன்மை. இந்த ஒத்துழைப்பால் கெடாவில் மேலும் வலிமை பெறப் போவது பாஸ்தானே தவிர பிஎன் அல்ல”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் முக்ரிஸ் கூறினார்.
கெடா சட்டமன்றத்தில் ஹரப்பான் 19 இடங்களைக் கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகளுக்கு 17 இடங்கள்.
அதில் 15 இடங்கள் பாஸுக்கு, இரண்டு பிஎன்னுக்கு.