மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக அப்துல் ஃபாரிட் தேர்வு

அப்துல் ஃபாரிட் அப்துல் காஃபூர், 2019/2020-ம் தவணைக்கான மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த அவர், இதற்கு முன்னர் வழக்கறிஞர் மன்றத்தின் துணைத் தலவராகவும், பினாங்கு மாநில வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தலைமைச் செயலாளரான ரோஜர் ச்சான் வெங் கெங், புதியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளராக, சுரிண்டர் சிங்கும், பொருளாளராக சலிம் பஸிர் பாஸ்கரனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்று, கோலாலம்பூர், விஸ்மா எம்சிஏ-யில், மலேசிய வழக்கறிஞர் மன்றம் தனது 73-வது ஆண்டுக் கூட்டத்தை நடத்தியது.

இன்றையக் கூட்டத்தில், கொடுங்கோன்மை சட்டங்களை உடனடியாக இரத்து செய்வது பற்றியும் பேசப்பட்டது.