கெடா, பெண்டாங்கில் வெப்பஅலை நிலை 2-ல் உள்ளது

இன்று, தீபகற்ப மாநிலங்கள் ஒன்பதில் வெப்பஅலை நிலை 1-ல் – எச்சரிக்கை நிலை – இருந்தவேளை, கெடா, பெண்டாங்கில் 2-ம் நிலையில் – 37-ல் இருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை – இருந்தது.

மலேசிய அளவியல் இலாகாவின் (மெட்ரோலோஜி) தகவல்படி, இன்று மாலை 5.20 மணி வரை, 21 பகுதிகளில் வெப்பநிலை 1-ல், 35-ல் இருந்து 37 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.

பெர்லிசில் சூலிங், கெடாவில் கூலிம், கோத்த ஸ்டார், சிக் மற்றும் பாலிங், பேராக்கில் உலு பேராக், கோலா கங்சார், கிந்தா மற்றும் பத்தாங் பாடாங், பஹாங்கில் ஜெராந்துட், ராவுப், தெமர்லோ, மாரான் மற்றும் பெந்தோங், சிலாங்கூரில் செப்பாங், உலு சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங், நெகிரி செம்பிலானில் போர்ட்டிக்சன், மலாக்காவில் மலாக்கா தெங்கா, ஜொகூரில் தங்காக் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் அதிக வெப்பநிலை காட்டப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை, அடுத்த 3 நாட்களுக்குத் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • பெர்னாமா