அம்னோ, பக்கத்தான் ஹரப்பானுக்கு மாறிச் சென்ற அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை – அது செலவுமிக்கது என்பதால்- கைவிட்டதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன.
அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் கட்சியை வலுப்படுத்துவதில்தான் மிகுந்த கவனம் செலுத்துகிறார் என்று அவை கூறின.
“இப்போதைக்குக் கட்சியைப் பலப்படுத்திச் சீரமைப்பதே முக்கியம் என்று முகம்மட் நினைக்கிறார்.
“மேலும், சட்ட நடவடிக்கை எடுப்பது செலவு மிக்கது என்பதும் ஒரு காரணம்”, என ஒரு வட்டாரம் த மலேசியன் இன்சைட்டிடம் இன்று தெரிவித்தார்.
ஜிஇ14 தோல்விக்குப் பின்னர் அம்னோவிடம் பணப் பற்றாக்குறை.
1எம்டிபி ஊழல் தொடர்பில் அதன் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.