இனிப்புப் பானங்கள் வரியைக் கொண்டு பள்ளிகளுக்கு இலவச காலை உணவு

இனிப்புப் பானங்களுக்கான வரியால் கிடைக்கும் வருமானம் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியமான காலை உணவு இலவச வழங்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

“அடுத்த ஆண்டிலிருந்து இந்த வரி மூலமாகக் கிடைக்கும் வருமானம் எல்லாத் தொடக்கநிலைப் பள்ளிகளுக்கும் அரோக்கியமான இலவச காலை உணவு வழங்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

“நம் பிள்ளைகள் பள்ளிப்படிப்பில் சிறந்த விளங்க ஆரோக்கியமானவர்களாக, வலிமை வாய்ந்தவர்களாக இருப்பது முக்கியம்”, என்றாரவர்.

இவ்வாண்டில் அமலுக்கு வரும் ஓரே வரி இந்தச் சீனி வரி மட்டுமே என்றும் மகாதிர் கூறினார்.