சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான (ஐசிசி) ரோம் சாசன ஒப்பந்தத்தில் இணைவதை, மலேசியா தொடர வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைக் குழு அழைப்பு விடுத்தது.
அந்த உடன்படிக்கைக்கு அரசாங்கம் ஒப்புக்கொள்வது, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக, சர்வதேச குற்றவியலை எதிர்ப்பதில் நாம் தேசிய உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதைச் சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கும் ஒரு நடவடிக்கை என மலேசிய எம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (எ.இ.) தெரிவித்துள்ளது.
“ஆனால், நம் நாடு அந்த உறுதிப்பாட்டிலிருந்து விலகியது அதிர்ச்சியூட்டும் அறிவிப்பாக உள்ளது,” என எ.இ. மலேசியா நிர்வாக இயக்குநர் ஷாமினி தர்ஷிணி காளிமுத்து ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“மலேசியா, இதற்கு முன்னர் கூறியது போல், மில்லியன் கணக்கான சர்வதேச குற்றவாளிகளுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே வழி ஐசிசி ஆகும்.
“உதாரணத்திற்கு, ஐசிசி-யிலிருந்து விலகினால், ரொஹிங்கியா பிரச்சனையில் மலேசியா முன்னெடுத்திருக்கும் பாராட்டுக்குரிய முயற்சிகள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும்,” என ஷாமினி கூறினார்.
இதற்கிடையில், ஆசியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு துணை இயக்குநர், பில் ரோபர்ட்சன், ஐசிசி ஒப்பந்தத்தில் சேர்ந்து, இன்னும் ஒரு மாதம் நிறைவடையாத நிலையில், அதிலிருந்து விலக மலேசியா எடுத்துள்ள முடிவு, நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் குறைத்து மதிப்பிடுகிறது என்று கூறியுள்ளார்.
“ஐசிசி-யிலிருந்து விலகி, மலேசிய அரசாங்கம் மனித உரிமை சீர்திருத்தங்களைக் கீழறுத்துள்ளது.
“நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் சில அரச உறவினர்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் கீழ்ப்படிந்திருக்கிறது.
“ஐசிசி-யில் சேரவில்லை எனின், அது நாட்டின் மனித உரிமை சீர்திருத்த செயற்பட்டியலை ஆபத்திற்கு உட்படுத்தும்,” என அவர் வலியுறுத்தினார்.
நாட்டிற்கு ஆபத்து என்பது காரணமல்ல
அரசியல் மற்றும் சமூகத்தில் எழுந்த குழப்பங்களைத் தொடர்ந்து, மலேசியா ஐசிசி-யிலிருந்து விலகுவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நேற்று அறிவித்தார்.
இந்தச் சட்டத்தை நிராகரிப்பதற்குக் காரணம், அது நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதல்ல, ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற, இது ஓர் அரசியல் நடவடிக்கை என்று இன்று, புத்ராஜெயாவில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பில் ரோபர்ட்சன் தெரிவித்தார்.
“அரச குடும்பத்தைச் சார்ந்த சிலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம், மலேசிய ஆட்சியாளர்கள், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இருக்கின்றனர்.
“அதுதான் காரணம். ஆனால், ஆட்சியாளர்களிடையே குழப்பம் இருப்பதால், சட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் என நாம் முடிவு செய்கிறோம்.
“ரோமானிய சாசனம் நமக்கு ஆபத்து என்பதால், நாம் அதிலிருந்து பின்வாங்கவில்லை. ஆனால், சில அரசியல்வாதிகளிடம் இருந்து குழப்பம் ஏற்பட்டுள்ளதால், நாம் இந்த முடிவை எடுத்துள்ளோம். இது எங்களுக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.
வார இறுதி அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.