அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான், அன்வார் இப்ராகிமுக்கு அம்னோ தலைவராகும் ஆசை இருக்குமோ என இன்று கிண்டலடித்தார்.
நேற்று அன்வார் பேசும்போது முகம்மட் அதிகாரப்பூர்வமாக அம்னோ தலைவராக்கப்படும் சாத்தியம் இல்லை என்று கூறியதற்கு எதிர்வினையாக அவர் அவ்வாறு கூறினார்.
“நான் நினைக்கிறேன் அவர் அந்த இடத்துக்கு(அம்னோ தலைவராக) வர ஆசைப்படுகிறார் போலும்”, என்று கூறிய முகம்மட், சட்டென்று வேடிக்கையாகத்தான் அப்படிச் சொன்னதாகக் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பரில் அஹமட் ஜாஹிட் ஹமிடி விடுப்பில் சென்றதை அடுத்து கட்சித் தலைவர் பொறுப்புகளை முகம்மட்தான் கவனித்துக் கொள்கிறார்.