ரிம6 மி. வீடு என்னுடையது அல்ல: மாட் ஹசான் மறுப்பு

நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஹசான் சிரம்பானில் மினாங்காபாவ்-பாணியில் கட்டப்பட்ட ரிம6 மில்லியன் வீடு தன்னுடையது என்று கூறப்படுவதை மறுத்தார்.

“அதன் வடிவமைப்பே எனக்கு ஒத்துவராத ஒன்று.

“நான் மினாங்காபாவ் வம்சாவளியில் வந்தவன் அல்ல”, என இன்று ரந்தாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

நெகிரி செம்பிலானில் முன்பு மினாங்காபாவ் பாணியில் கட்டிடங்கள் கட்டுவது ஒரு கொள்கையாக இருந்து வந்தது என்றும் தான் மந்திரி புசாராக இருந்த காலத்தில் அக்கொள்கையை மாற்றி அமைத்ததாகவும் கூறிய முகம்மட் தனக்குக் கட்டிடங்கள் நெகிரி செம்பிலான் மலாய்-பாணியில் கட்டப்படுவதுதான் பிடிக்கும் என்றார்.