ஜோகூர் எதிர்க்கட்சித் தலைவர் ஹஸ்னி முகம்மட், அம்மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாரைச் சந்திக்கும்போது காலியாக உள்ள மந்திரி புசார் பதவி தொடர்பாக இரண்டு பரிந்துரைகளை முன்வைப்பார்.
ஒன்று பெர்சத்துக் கட்சித் தலைவர் முகைதின் யாசினை மந்திரி புசாராக நியமிக்க வேண்டும் அல்லது சட்டமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் -இவைதான் அவ்விரண்டு பரிந்துரைகளாகும் என ஜோகூர் அம்னோ தலைவருமான ஹஸ்னி இன்று பிற்பகல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஹஸ்னி, வெள்ளிக்கிழமை சுல்தானைச் சென்று காண்பார்.
மந்திரி புசாராகக் கூடும் என்று ஆருடம் கூறப்படும் வேறு எந்த பக்கத்தான் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினருக்கும் அப்பதவியை ஏற்கும் தகுதி இல்லை என்றாரவர்.
உள்துறை அமைச்சராகவுள்ள முகைதின், கம்பீர் சட்டமன்ற உறுப்பினருமாவார். அவர் முன்பு பிஎன் ஆட்சியில் கூட்டரசு அரசாங்க அமைச்சராவதற்குமுன் ஜோகூர் மந்திரி புசாராக இருந்திருக்கிறார்.
அனுபவம் வாய்ந்த முகைதின் போன்ற ஒருவர் அப்பதவியில் இருந்தால்தான் ஒஸ்மான் சாபியானுக்கு நேர்ந்தது போன்ற ஒன்று மீண்டும் நிகழாது என்று ஹஸ்னி கூறினார்.
“ஜோகூருக்கு அனுபவம் வாய்ந்த ஒருவர் தேவை. ஜோகூரை நிர்வகிப்பது எளிதல்ல.
“அம்மனிதர் ஜோகூர் சிவில் சேவையைப் புரிந்துகொண்டவராக, மாநில அரசமைப்பைப் புரிந்தவராக இருத்தல் வேண்டும். அனுபவம் இல்லாத எம்பி என்றால் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள நீண்ட காலமாகும்”, என்றவர் சொன்னார்.