மீண்டும் மந்திரி புசார் ஆவதற்கு முகைதின் விரும்பவில்லை

ஒஸ்மான் சாபியான் விலகிக் கொண்டதால் காலியாகவுள்ள ஜோகூர் மந்திரி புசார் பதவிக்குத் தம்மை நியமிக்கலாம் என்ற ஜோகூர் அம்னோவின் பரிந்துரையை உள்துறை அமைச்சர் முகைதின் நிராகரித்தார்.

“அம்னோ அப்படிக் கூறியுள்ளது. என்னை நியமிக்கும் உரிமையும் அதிகாரமும் தங்களுக்கு இருக்கிறது என்ற நினைப்பு அவர்களுக்கு. நான் அப்படி நினைக்கவில்லை.

“முன்பு மந்திரி புசாராக இருந்துள்ளேன்.மீண்டும் அப் பதவிக்குத் திரும்பிச் செல்வது சரியாக இருக்காது”, என முகைதின் இன்று பிற்பகல் சுபாங்கில் உள்ள கடல்சார் கல்விக்கழகத்துக்கு வருகை புரிந்தபோது கூறினார்.