செலவினம் குறைக்கப்பட்டு இசிஆர்எல் திட்டம் மீண்டு வந்துள்ளது

கிழக்குக்கரை இரயில் திட்டம்(இசிஆர்எல்) கைவிடப்படாது. அது செலவு குறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனப் பிரதமர்துறை இன்று அறிவித்தது.

“அதன் முதல் கட்ட, இரண்டாம் கட்டக் கட்டுமான செலவுகள் ரிம65.5 பில்லியனிலிருந்து ரிம44 பில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளன, இது ஏற்கனவே திட்டமிட்டதைவிட ரிம21.5 பில்லியன் குறைவாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

“இந்தக் குறைப்பு மலேசியாவுக்கு நன்மையாக அமையும், நாட்டின் நிதிச் சுமையையும் குறைக்கும்”, எனப் பிரதமர்துறை அறிக்கை கூறியது.