ஒஸ்மான்: சுல்தான் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டார்; ஆட்சிக்குழு சிரமைக்கப்பட வேண்டும் என்றார்

ஜோகூர் முன்னாள் மந்திரி புசார் ஒஸ்மான் சபியான் இன்று காலை ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இஸ்கண்டாரைச் சந்தித்து அவரிடம் தனது பணிவிலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.

“என் பணிவிலகல் கடிதத்தை சுல்தானிடம் ஒப்படைத்தேன். அதை அவர்   வாங்கி வைத்துக்கொண்டார்.

“சுல்தான் வரப்போகும் மந்திரி புசாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார். மாநில ஆட்சிக்குழுவைச் சீரமைக்க வேண்டும் என்றார்”. ஒஸ்மான் இவ்வாறு கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.

ஒஸ்மான், இதற்குமுன்பே பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் தன் பணிவிலகல் கடிதத்தைக் கொடுத்திருந்தார்.

ஜோகூரின் அடுத்த மந்திரி புசாரைத் தேர்ந்தெடுக்கும் விசயத்தில் மகாதிருக்கும் ஜோகூர் அரண்மனைக்கு ஒரு சிறு சர்ச்சை.

ஆட்சியாளர்கள் விருப்பப்படிதான் பிரதமரோ மந்திரி புசாரோ தேர்ந்தெடுப்பட வேண்டுமென்றால் மலேசியா ஒரு ஜனநாயக நாடாக இருக்க முடியாது என்று மகாதிர் கூறினார்.

அதற்கு முன்னதாக சுல்தான் இப்ராகிம், “சில தரப்புகள்” மாநில விவகாரங்களில் தலையிடுவதாகவும் அது கூடாது என்றும் எச்சரித்திருந்தார்.