மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திச் செய்து கொள்ளப்பட்டிருக்கும் கிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்) பூமிபுத்ராக்கள் உள்பட, உள்ளூர் குத்தகையாளர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குவதாக டயிம் சைனுடின் கூறினார்.
பிரதமரின் சிறப்பாக தூதராக சீன அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி அந்தப் புதிய ஒப்பந்தத்தைச் செய்து முடித்தவரான டயிம், நாட்டின் பொருளாதார அமைப்பையே மாற்றப்போகும் அத்திட்டம் நிறைய வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகவும் உள்ளூர் குத்தகையாளர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வாய்ப்பை நழுவ விட்டால் இழப்பு அவர்களுக்குத்தான் என்றும் அவர் சொன்னார்.
“அவர்கள் மலேசிய இரயில் தொடர்பு(எம்ஆர்எல்) நிறுவனத்துக்குச் சென்று அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்.
“வெட்கமாக இருந்தால் என்னை வந்து பாருங்கள். உங்களுக்கு உண்மையிலேயே தகுதி இருந்தால் நான் உதவுவேன்.”, என்றவர் பெர்னாமா நேர்காணல் ஒன்றில் கூறினார்.