மகாதிர்: ஆறுகளும், காற்றும் தூய்மைக் கெட்டுள்ள நிலையில் வானளாவும் கட்டிடங்களால் என்ன பயன்?

என்னதான் நாட்டை மேம்படுத்தினாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்காதுபோனால் மலேசியா ஒரு வெற்றிபெற்ற நாடாக, வளர்ச்சி அடைந்த நாடாகக் கருதப்படாது என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.

இன்றைய தலைமுறைக்காகவும் வருங்காலத் தலைமுறைக்காகவும் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல அனைவரின் கூட்டுப் பொறுப்புமாகும்.

“ஆதாயத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முறைகேடான வளர்ச்சியால் விளையும் விபரீதங்களைக் கண்டிருக்கிறோம்.

“வானளாவும் கட்டிடங்களை மட்டுமே கட்டிக்கொண்டு ஆறுகள் தூய்மை கெடுவதையும் சுவாசிக்கும் காற்று கெடுவதையும் கண்டுகொள்ளாதிருந்தால் வளர்ச்சியடையும் முயற்சிகளிலும் வெற்றிபெற மாட்டோம், வளர்ச்சி அடைந்த நாடாகவும் மதிக்கப்பட மாட்டோம்”.

மகாதிர் இன்று தாமான் துகுவில் உலகப் புவி தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு கூறினார்.