பகாங்கின் ரிம17பி. இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை- சேவியர்

நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் சேவியர் ஜெயகுமார், காடுகளைப் பாதுகாப்பதற்கு எல்லா மாநிலங்களுமே இழப்பீடு கோருகின்றன என்றும் அவை கேட்கும் இழப்பீட்டை மத்திய அரசாங்கத்தால் கொடுக்க முடியுமா என்பது வேறு விசயம் என்றும் கூறினார்.

பகாங் அதன் காட்டுப்பகுதிகளைப் பாதுகாப்பதற்கு ரிம17 பில்லியன் கேட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார். பகாங்கின் காட்டுப்பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களுக்குக் குறிப்பாக, சிலாங்கூருக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகவும் விளங்குகின்றன.

“இந்த விவாகாரம் தொடர்பில் எந்த மாநிலத்துக்கும் இழப்பீடு வழங்குவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சேவியர் கூறினார்.

பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், காடுகளைப் பராமரிப்பதால் வெட்டுமரத் தொழில், சுரங்கத் தொழில் போன்றவை மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை இழப்பதாகவும் அவற்றைத் தோட்டங்களாக மாற்றினால் நில வரி கிடைக்கும் அதுவும் இப்போது கிடைப்பதில்லை என்றும் கூறி அவற்றுக்கு இழப்பீடு கேட்கப்போவதாகக் கூறியிருந்தார்.