மெட்ரிகுலேஷன் கல்வி: கோட்டா முறை தக்க வைத்துக்கொள்ளப்பட்டது ஏன்?

மெட்ரிகுலேஷன் வகுப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் பூமிபுத்ரா மாணவர்களுக்கு 90 விழுக்காடு இடம் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடம் என்ற கோட்டா முறை அப்படியே தக்க வைத்துக் கொள்ளப்பட்டிருப்பது பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்கு வியப்பளிக்கவில்லை.

மலாய்- முஸ்லிம் சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பலாம் என்று அஞ்சியே பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் மெட்ரிகுலேஷன் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இருந்துவந்த கோட்டா முறையை அப்படியே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது என்றாரவர்.

அதே வேளை மெட்ரிகுலேஷன் வகுப்புகளுக்கான இடங்கள் 25,000-லிருந்து 40,000-ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.40,000 இடங்களில் 36,000 பூமிபுத்ரா மாணவர்களுக்கு, வெறும் 4,000 பூமிபுத்ரா- அல்லாதாருக்கு.