அரசாங்கம் சிறுவர் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்க சிறுவருக்கான ஒரு அமைப்பை உருவாக்கத் திட்டமிடுகிறது என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
இப்போது சமுக நலத் துறையில் சிறுவர் நலத் துறை ஒன்று இருக்கிறது. ஆனால், அதற்கு அளவுக்கு அதிகமான பொறுப்புகள் உள்ளன என்றாரவர்.
“சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமை விவகாரங்களைக் கவனிக்க ஒரு தனித் துறை தேவைப்படுகிறது. அப்படி ஒன்றை அமைப்பது பற்றித்தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையுமே சமூக நலத் துறையால் கவனித்துக்கொள்ள முடியாது”, என்று இயோ கூறினார்.
அப்படி ஒரு துறையை அமைக்க சிறிது காலம் பிடிக்கும் என்றாரவர்.
சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்த சிறுவர்நல ஆணையர் ஒருவரும் நியமிக்கப்படுவார்.