பாஸ் கட்சியினர் கட்சி விவகாரங்களை பகிரங்கமாக விவாதிக்கத் தடை

பாஸ்  அதன் உறுப்பினர்கள் கட்சி விவகாரங்களை வெளிப்படையாக விவாதிக்கத் தடை விதித்துள்ளது.

கட்சி தொடர்பான ஆலோசனைகளோ விமர்சனங்களோ கருத்துகளோ கட்சிக்குள்ளேயே வைத்துக்கொள்ளப்பட வேண்டும் என  பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான்     இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“இதுதான் கட்சியின் கட்டொழுங்கு. கட்சி பேச்சுச் சுதந்திரத்தை அனுமதிக்கிறது அதேவேளை கட்சியின் இரகசியங்களையும் கட்டிக்காக்க விரும்புகிறது”, என்றாரவர்.

இத் தடை உத்தரவை மீறுவோர்மீது கட்சியின் கட்டொழுங்குக் குழு நடவடிக்கை எடுக்கும்.

பாஸ் உறுப்பினர் ஸஹாருடின் முகம்மட் கட்சித் தலைவர்கள் சிலர் அம்னோவிடம் நிதியுதவி பெற்றது குறித்துக் கருத்துரைத்ததன் விளைவுதான் இத் தடையுத்தரவு என்று கூறப்படுகிறது.