ஜோகூர் அரசுப் பணியாளர்களுக்குப் பெருநாள் சிறப்பு உதவி

ஜோகூர் மாநில அரசுப்பணியாளர்கள் மாநில அரசிடமிருந்து நோன்புப் பெருநாள் சிறப்பு நிதி உதவி பெறுவார்கள் என்று மந்திரி புசார் டாக்டர் ஸாருடின் ஜமால் இன்று அறிவித்தார்.

உதவி தொடர்பான மற்ற விவரங்களை மாநிலச் செயலாளர் அஸ்மி ரொஹானி அறிவிப்பார் என்றவர் சொன்னார்.

அந்த உதவி அய்டிபிட்ரி-க்கு முன்பு கொடுக்கப்படும் என்றாரவர்.

ஜோகூரில் 16ஆயிரத்துக்கு மேற்பட்ட மாநில அரசுப் பணியாளர்கள் இருப்பதாக அறியப்படுகிறது.

கடந்த நவம்பரில் மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அப்போதைய மந்திரி புசார் ஒஸ்மான் சாபியான், மாநில அரசு இவ்வாண்டில் அரசுப் பணியாளர்களுக்குச் சிறப்பு நிதியுதவியாக ரிம1,500 வழங்கும் என்று கூறியிருந்தார்.

பெர்னாமா