ஐஎஸ்-தொடர்புக் கும்பல் ஆடிப் பெயரைத் தவறாக பயன்படுத்தி க் கொண்டிருக்கிறது -வழக்குரைஞர்

மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்-தொடர்புடைய கும்பல், அதன் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த காலஞ்சென்ற தீயணைப்புப் படை வீரர் முகம்மட் ஆடிப் முகம்மட் காசிமின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

அடிப்பின் குடும்பத்தினருக்கும் ஆடிப்பின் மரணத்துப் பழிவாங்கத்தான் மலாய்க்காரர்-அல்லாதாரின் வழிபாட்டுத் தளங்களைத் தாக்கத் திட்டமிட்டதாக ஐஎஸ்-தொடர்புடைய கும்பல் கூறிக்கொள்வதற்கும் தொடர்பில்லை.

“அவர்கள் ஆடிப்பின் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு எந்தத் தொடர்புமில்லை”, என ஆடிப்பின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் ஆடிப் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் கமருல்ஸமான் ஏ.வகாப் மலேசியாகினியிடம் கூறினார்.