அரசாங்க ஊழியர்களுக்கு ராயா போனஸ் உண்டு- மகாதிர்

அரசாங்கம் அதன் பணியாளர்களுக்கு அய்டில்பித்ரி போனஸ் கண்டிப்பாக வழங்கும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார்.

ஆனால், எவ்வளவு கொடுக்கப்படும், எல்லாருக்குமே கொடுக்கப்படுமா என்பனவற்றை அவர் தெரிவிக்கவில்லை. அது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

“அரசாங்கப் பணியாளர்களுக்க்கு அய்டில்பித்ரி போனஸ் உண்டு. அதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்”, என்றவர் இன்று ஜார்ஜ்டவுனில் 2019 தேசிய நிலை ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

கடந்த ஆண்டு கிரேட் 41க்கும் அதற்கும் கீழேயுள்ள அரசுப் பணியாளர்களுக்கு 400 ரிங்கிட்டும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 200 ரிங்கிட்டும் ராயா போனசாக வழங்கப்பட்டது.

-பெர்னாமா