மலேசியாவின் பிரபல வரலாற்றாசிரியர் கூ கே கிம் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 82.
இதை அவரின் மகன் எட்டி கூ மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
அன்னாரின் மரணம் குறித்து விரைவில் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பெர்னாமா கூ-வின் இரண்டாவது மைந்தர் ரூபின் கூ-வை மேற்காட்டி நுரையீரல் பாதிப்பினால் அவர் இன்று காலை மணி 10.13 வாக்கில் யுனிவர்சிடி மலாயா மருத்துவ மனையில் காலமானார் என்று செய்தி வெளியிட்டிருந்தது.
கூ பேராக் கம்பாரில் பிறந்தவர். அவரின் மனைவி புவான் ஸ்ரீ ரதி கூ,75. அவருக்கு எட்டி, ரூபின், மாவின் என மூன்று பிள்ளைக