2020 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டை ஒட்டி சீனச் சுற்றுப்பயணிகளுக்கு நுழைவு விதிகளைத் தளர்த்த புத்ரா ஜெயா திட்டம்மிடுவதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார்.
“அடுத்த ஆண்டு சுற்றுப்பயண, கலாச்சார ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.
“இரு நாடுகளுக்குமிடையில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
“இந்நிலையில் சீனச் சுற்றுப்பயணிகளுக்கான நுழைவு விதிகளைத் தளர்த்த மலேசிய அரசாங்கம் திட்டமிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
“விரைவில் அதன் தொடர்பான அறிவிப்பு வரும்”, என்றவர் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.