அம்னோ அதன் அமைப்புவிதி உட்பிரிவு 9.9-இல் திருத்தம் செய்வதற்குத் தயராகி வருவதாகக் கூறும் செய்திகளில் உண்மை இல்லை என்கிறார் அதன் உதவித் தலைவர் முகம்மட் காலிட் நோர்டின்.
அம்னோ, அஹ்மட் ஜாஹிட் ஹமிடியையும் நஜிப் அப்துல் ரசாக்கையும் கட்சியிலிருந்து வெளியேற்ற சதி செய்வதாக சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியதை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டிருந்த மலேசியாகினியை அவர் சாடினார்.
அந்த அமைப்புவிதியில் திருத்தம் செய்யப்பட்டால் நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கும் கட்சி உறுப்பினர்களின் உறுப்பியம் தானாகவே முடிவுக்கு வந்து விடும் என்று ஸ்ரேய்ட்ஸ் டைமஸ் கூறியிருந்தது.
அஹமட் ஜாஹிட்டும் நஜிப்பும் பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அச்செய்தியை அப்படியே வெளியிடுவதற்குமுன் மலேசியாகினி தன்னைத் தொடர்புகொண்டு விளக்கம் பெற்றிருக்கலாம் என்று கூறிய காலிட், அச்செய்தித்தளம் கெட்ட எண்ணத்துடன் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.