லத்திபா கோயா, மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) தலைவராகிறார். முகம்மட் சுக்ரி அப்துல் பணி விலகியதை அடுத்து லத்திபா கோயா எம்ஏசிசி தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர்துறை அலுவலகம் (பிஎம்ஓ) இன்று பிற்பகல் அறிவித்தது.
சுக்ரியின் ஒப்பந்தக் காலம் 2020, மே 17-இல் முடிவுக்கு வருகிறது. ஆனால், அவர் அதற்கு முன்னதாகவே விலகிக் கொண்டிருப்பதாக பிஎம்ஓ கூறியது.
உரிமைகளுக்காக போராடும் வழக்குரைஞர் அமைப்பின் நிர்வாக இயக்குனரான லத்திபா 2019, ஜூன் முதல் தேதி தொடங்கி ஈராண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பார்.