கேமரன் மலை எம்பி: ஓராங் அஸ்லி இறப்புகள்மீது சிறப்பு விசாரணைக் குழு தேவை

குவா மூசாங், கோலா கோ-வில் ஓராங் அஸ்லி மக்கள் 14 பேர் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியைத் துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க வேண்டும் என கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி முகம்மட் நோர் வலியுறுத்தினார்.

நாட்டின் முதலாவது ஓராங் அஸ்லி எம்பி ஆன அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அக்குழு அவர்களின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிவதுடன் மேல் நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளையும் முன் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.