துணைப் பிரதமர், அன்வாருக்கு இடம்விட்டு பதவி துறக்க மாட்டார்

டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் துணைப் பிரதமர் பதவியை அவரின் கணவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைத்துவிட்டு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையைப் புறம் தள்ளினார்.

“அதற்கு அவசியமே இல்லை. டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர். நான் துணைப் பிரதமர் என்பது நாங்கள் ஒப்புக்கொண்ட ஒன்று”, என இன்று கோலாலும்பூரில் வான் அசிசா செய்தியாளர்களிடம் கூறினார்.

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் ஷயிட் ரோஸ்லி, அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்குமுன் துணைப் பிரதமராக வேண்டும் அதற்கு வான் அசிசா பதவி விலக வேண்டும் என்று கூறியிருப்பது குறித்து வான் அசிசா கருத்துரைத்தார்.

பிரதமர் மாற்றம் நடக்கப்போவது உறுதி என்று வான் அசிசா கூறினார். ஆனால், அது எப்போது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

அன்வார் பிரதமரான பின்னர் தாம் துணைப் பிரதமர் பதவியில் இருக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.