நிலம் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிஷாமுடின்மீது எம்ஏசிசி விசாரணை

தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்கள் மாற்றிவிடப்பட்டது தொடர்பாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனை விசாரிக்க விருக்கிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஹிஷாமுடின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அஸாம் பாகி கூறினார்..

“நேற்று (முன்னாள் துணைப் பிரதமர்) அஹமட் ஜாஹிட் ஹமிடியிடம் வாக்குமூலம் வாங்கினோம்.

“அடுத்தது ஹிஷாமுடின். ஞாயிற்றுக்கிழமை அவர் எங்கள் அலுவலகம் வருவார்”, என்றவர் இன்று புத்ரா ஜெயாவில் எம்ஏசிசி தலைமையகத்தில் கூறினார்.