அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடிமீதான புதிய ஊழல் குற்றச்சாட்டுகளால் அம்னோவோ அது பாஸுடன் கொண்டுள்ள அரசியல் ஒத்துழைப்போ பாதிக்கப்படாது.
அவ்விரண்டு கட்சிகளும் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஜாஹிட் என்னும் தனிப்பட்ட மனிதர்மீதுதானே தவிர அம்னோ மீதல்ல என்று கருதுவதுதான் இதற்குக் காரணமாகும்.
இரு கட்சிகளும் கூட்டுச் சாசனம் ஒன்றைத் தயாரிப்பதுமீது பேச்சுகள் நடத்தத் தயாராகி வருவதாகவும் அடுத்த மாத வாக்கில் அது தயாராகி விடும் என்றும் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறியதாக த மலேசியன் இன்சைட் அறிவித்துள்ளது.