ஜூலை 30-இல் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்- முஸ்டபா பில்லா ஷா 16வது பேரரசராக அரியணை அமரும் விழா நடைபெறுகிறது. அதை ஒட்டி அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பக்கார் இன்று ஓர் அறிக்கையில் அதை அறிவித்தார். தீவகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்துக்கான பொது விடுமுறைச் சட்டத்தின் 8வது பிரிவின்படி இந்தக் கூடுதல் விடுமுறை விடப்படுவதாக அவர் சொன்னார்.
“சாபாவும் சரவாக்கும் அவற்றின் மாநிலச் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும்”, என்றாரவர்.