எம்பிகள் அவர்களின் சொத்து விவரங்கள் அவர்களின் குடும்பத்தாரின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்த முடியாது என எதிர்க் கட்சி எம்பிகள் கூறினர்.
இன்று நாடாளுமன்றத்தில் சொத்து அறிவிப்புத் தீர்மானம்மீதான விவாதத்தின்போது அத்தீர்மானத்தைத் தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்றவர்கள் வெளிப்படையாகவே கூறினர்.
நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொண்டு சட்டமாக்கினால்கூட தன் சொத்து விவரங்களை அறிவிக்கப்போவதில்லை என தகியுடின் ஹசான்(பாஸ்-கோட்டா பாரு) கூறினார்.