மகாதிரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், இன்று காலை பிரதமர் டாக்டர் மகாதிரை புத்ரா ஜெயாவில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

எதைப் பற்றிப் பேசப்பட்டது என்று வினவியதற்கு லிம் சரியாக பதில் அளிக்கவில்லை.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தாங்கள் இருவரும் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும் என இஸ்கண்டர் புத்ரி எம்பி கூறினார்.

“45 நிமிடம் சந்தித்தோம். நாட்டு நிலவரம் பற்றிப் பேசினோம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, ஜோகூர் டிஏபி தலைவர் லியு சின் தொங், லிம்மும் மகாதிரும் சந்திக்கும் படமொன்றை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.