பிஜே-இல் ஜாலான் செமாங்காட் ‘ஜாலான் புரொபசர் கூ கே கிம்’-ஆக பெயர்மற்றம்

சிலாங்கூர் அரசு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாலான் செமாங்காட்டைப் பிரபல வரலாற்றுப் பேராசிரியரைச் சிறப்பிக்கும் வகையில் ஜாலான் புரொபசர் கூ கே கிம்-ஆக பெயர்மற்றம் செய்துள்ளது.

பெயர் மாற்றத்துக்கு சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இணக்கம் தெரிவித்ததாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

ஜாலான் செமாங்காட், செக்‌ஷன் 14-இல் கூ பேராசிரியராகப் பணியாற்றிய மலாயாப் பல்கலைக்கழகம் அருகில் அமைந்துள்ளது.

கூ நாட்டுப்பற்றாளர்,  தேசியவாதி என்று அமிருடின் வருணித்தார்.

கூ ஆங்கிலத்திலும் மலேசிய வரலாறு பற்றி மலாயிலும் ஆங்கிலத்திலும் நிறைய நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் மே 28-இல், தம்முடைய 82ஆவது வயதில் காலமானார்.