ஊராட்சித் தேர்தல்: ஆண்டு இறுதிக்குள் அமைச்சரவையிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்

வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு ஊராட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டுவருவது மீதான அறிக்கையை அமைச்சரவையிடம் வழங்கும் என அதன் துணை அமைச்சர் ராஜா கமருல் பாஹ்ரேன் ஷா கூறினார்.

அடுத்த ஆண்டுக்குள் அதன்மீது முடிவெடுக்கப்படலாம் என்றாரவர்.

“அமைச்சரவையிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அது விவாதித்து முடிவெடுக்கும். ஆண்டு இறுதிக்குள் முடிவெடுக்கப்படலாம்”, என்று துணை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.